வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (17:19 IST)

கனிமொழியை தூத்துக்குடிக்குள் மட்டுமே சுருக்கி வைத்திருக்கிறார்கள்.. நடிகை விந்தியா

திமுகவில் உதயநிதிக்கு அதிகாரங்கள் கொடுத்து கனிமொழியை மட்டும் தூத்துக்குடியில் சுருக்கி வைத்திருக்கிறார்கள் என்று அதிமுக பேச்சாளர் விந்தியா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை ஏதோ ஒரு ஜாதிய தலைவர் போல் தூத்துக்குடிக்குள் சுருக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் அவருக்கு ஆட்சியில் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சார மேடையில் பேசினார்

ஒண்ணுமே தெரியாத உதயநிதிக்கு மகுடம் சூட்ட நினைக்கும் திமுக கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கும் நிலையில் கருணாநிதி மடியில் வளர்ந்த கனிமொழியும் ஒரு முக்கிய பதவியில் தான் இருந்திருக்க வேண்டும், அவரை மட்டும் ஏன் ஒதுக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்

இந்த நிலையில் கனிமொழி தன்னுடைய உரிமையை கூட திமுகவில் கேட்காமல் இருக்கும் நிலையில் மக்களின் உரிமையை எப்படி அவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பார் என்றும் தூத்துக்குடி மக்கள் மீது அவருக்கு எந்த அக்கறையும் கடினம் கிடையாது என்றும் கூறினார்

Edited by Mahendran