1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (14:59 IST)

திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை.. திருச்செங்கோடு பகுதியில் 5 பேர் கைது

திருச்செங்கோடு பகுதியில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஐந்து பேருக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்களை அடுத்து போலீசார் அதிரடியாக சோதனை செய்ததில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து காவல்துறையிடம் விசாரணை செய்து வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் குடோனை வாடகைக்கு எடுத்து அதில் போலி மதுபானம் தயாரித்து 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர விற்பனைக்காக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது 
 
மேலும் 5400 லிட்டர் போலி மதுபானம்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு இரண்டு சக்கர வாகனம் மற்றும் ஒரு மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran