1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (15:15 IST)

விநாயகர் சதுர்த்தி பொதுவிடுமுறை தேதி மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Holiday
தமிழ்நாடு அரசு விடுமுறை தின பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை ஞாயிறு அன்று விடப்பட்ட இrஉந்த நிலையில் தற்போது அந்த விடுமுறை திங்கட்கிழமைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு விடுமுறை தினங்கள் என ஒரு பட்டியல் வெளியாகும் என்பதும் அந்த பட்டியலில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர்  17 அன்று ஞாயிற்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக செப்டம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சனி ஞாயிறு திங்கள் என மூன்று தொடர் நாள் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் பள்ளி கல்லூரி மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran