ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (09:22 IST)

ஓணம் பண்டிகை.. உள்ளூர் விடுமுறை என அறிவித்த மாவட்ட ஆட்சியர்..!

Onam
ஓணம் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாட இருப்பதை அடுத்து கேரளாவில் ஒட்டி உள்ள தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று. 
 
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 29ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக செப்டம்பர் 29ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டி கேரளாவில் இருக்கும் வேறு சில மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran