திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (07:31 IST)

இன்று ஓணம் பண்டிகை.. சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை..!

Onam
கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
குறிப்பாக ஓணம் பண்டிகை சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகி மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது என்பதும் மேற்கண்ட 3 மாவட்டங்களிலும் இன்று விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கேரளாவை ஒட்டி உள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகையை மலையாளிகள் மற்றும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் ஓணம் பண்டிகை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலர்களால் வாசலில் கோலம் போட்டு இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva