செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (18:42 IST)

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

Modi

நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீராமனத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையாற்றுவதற்காக என்னை தேர்வு செய்துள்ளனர். 14வது முறையாக அவையில் பேசுவதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். சாமானிய, ஏழை எளிய மக்களை முன்னேற்றிக் கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி உரையில் இருந்தன.

 

ஏழை மக்களின் நிலை உணர்ந்து வீடில்லாத 4 கோடி பேருக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. 5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமையை ஒழித்துள்ளோம். சிலர் ஏழைகளின் வீட்டில் புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். மக்களிக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசின் பணி

 

நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மக்களின் பணம் மக்களுக்கு என்பதே எங்கள் மாடல், முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்துப் போயிருந்தன. தூய்மை இந்தியா திட்டத்தை பலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் தூய்மை இந்தியா திட்டத்தில் கிடைத்த பழையவற்றை விற்றதில் அரசுக்கு ரூ.2,300 கோடி கிடைத்துள்ளது.

 

மேலும் ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கி மக்களின் வங்கி கணக்கில் சுமார் ரூ.40 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். 25 கோடி மக்கள் பணக்காரர்களாக மாறியுள்ளனர்

 

Edit by Prasanth.K