செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (18:50 IST)

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

மெக்சிகோ மற்றும் கனடா நாட்டின் மீதான கூடுதல் வரி விதிப்பு கட்டணங்களை ஒரு மாதத்திற்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததால் இன்று சென்செக்ஸ் 1.81 சதவிகிதம், நிஃப்டி 1.62 சதவிகிதம் உயர்ந்தது

இன்று சென்செக்ஸ் 1,471.85 புள்ளிகள் உயர்ந்து 78,658.59 புள்ளிகளாக வர்த்தகம் உயர்ந்து, வர்த்தக முடிவில்  சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து 78,583.81 புள்ளிகளில் முடிந்தது.

அதேபோல் தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளாக அதிகரித்தது.

இன்று லார்சன் & டூப்ரோ, அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தது.

ஆனால் ஐடிசி ஹோட்டல்கள், சொமேட்டோ, நெஸ்லே, மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தது  

 ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை கணிசமாக உயர்ந்ததாகவும், ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து வர்த்தகம் ஆனதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva