செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (16:05 IST)

சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் அனுமதிக்க வாகனங்கள் !

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் 144 உத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 144 செயல்பாட்டில் இருந்தாலும் மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் இயங்க தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு மட்டும் சென்னையிலிருந்து 1.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சாலை போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பை, இன்று ஒரு நாள் நிறுத்த முடியுமா என நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிலையத்தில் வாகனங்கள் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் சாலைகளில் வாகன நெருக்கம் குறைந்துள்ளது.