கொரோனா தினமும் எப்படி பரவுகிறது ? தயாநிதி மாறன் எம்.பி வெளியிட்ட வைரல் வீடியோ…!
கொரோனா தினமும் எப்படி பரவுகிறது ? தயாநிதி மாறன் எம்.பி வெளியிட்ட வைரல் வீடியோ…!
கடந்த வருடத்தின் தொடக்கத்தில் சீனவில் இருந்து உலக நாடுகளுகு பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்று, வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடிடொ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், சீனாவில் இருந்து பரவிய இந்த தொற்று சுமார் 67 நாட்களில் 1 லட்சம் பேரை பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
பின், அடுத்த ஒரு லட்சம் பேரை பாதிக்க வெறும் 11 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அடுத்து 3 வதாக 1 லட்சம் பேருக்கு பரவ 4 நாட்களே ஆனதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனாவுக்கு எதிராக எந்த மருந்தும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய சென்னை திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கொரோனா ஒருவரை பாதித்தால் நாளுக்கு நாள் என்ன அறிகுறி ஏற்படும் என்பது குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டு, இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.