மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியம் - முதல்வர் அறிவிப்பு!

edapadi palanisamy
sinoj| Last Modified செவ்வாய், 24 மார்ச் 2020 (15:11 IST)
மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியம் - முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.இன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.


மேலும், கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர அரசு விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனவைத் தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் சட்டசபையில்
அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்திருந்தார்.


இந்நிலையில்,
இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் விவகாரத்தில் மக்கள் அலட்சியம் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை எதிர்கொள்ள இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டசபையில் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கரகோஷம் எழுப்பி மரியாதை செலுத்தினர். இதற்கு முன்னதாக ,கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார்.இதில் மேலும் படிக்கவும் :