திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (12:21 IST)

தமிழக முதல்வரை சந்தித்த விக்கிரமராஜா: இரண்டே இரண்டு கோரிக்கைகள்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் சற்று முன் சந்தித்த இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தற்போதைய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஊரங்கு அறிவிப்பின் போது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று முதல்வரை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் சில நிபந்தனைகளுடன் ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாகவும் எனவே 21ம் தேதி நீட்டிக்கப்படும் ஊரடங்கின் போது அறிவிக்கப்படும் தளர்வுகளில் ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மால்கள் திறக்க அனுமதிக்கப்படுமா என்பது சந்தேகமே என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன