புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (20:06 IST)

தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாது: விஜயபிரபாகரன்

தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாது: விஜயபிரபாகரன்
தமிழகத்தில் இனி தேமுதிக துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என கேப்டன் விஜயகாந்த் மகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவருடைய மகன் விஜய் பிரபாகரன், தேமுதிக கட்சியை கடந்த சில நாட்களாக வழி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று பொங்கல் திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்பிரபாகரன், '2011ஆம் ஆண்டில் எப்படி அரசியல் கட்சி தலைவர்கள் கோயம்பேடு நோக்கி வந்தார்களோ, அதேபோல் 2019ஆம் ஆண்டிலும் வருவார்கள். தேமுதிகவிற்கு வாக்குவங்கி இல்லை என்று ஏளனம் செய்தவர்கள் பலர் எங்கள் கூட்டணி சேருவார்கள். எனவே யாரும் பயப்பட வேண்டும். கேப்டன் துணை இல்லாமல் யாராலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது' என்று கூறினார்.

தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சியமைக்க முடியாது: விஜயபிரபாகரன்
மேலும் பொதும்க்களுக்கு தனது கையால் பொங்கல் பரிசுகள் அடங்கிய பைகளையும் பொறுமையுடன் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.