வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 ஜனவரி 2019 (07:51 IST)

விஜயகாந்த் ஓகே! ரஜினி கமலுடன் கூட்டணி இல்லை: சரத்குமார்

விஜயகாந்த் ஓகே! ரஜினி கமலுடன் கூட்டணி இல்லை: சரத்குமார்
விஜயகாந்த் விரும்பினால் அவரது தேமுதிக கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கட்சி தலைமையும் நிர்வாக்குழு உறுப்பினர்களும் விரும்பினால் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

விஜயகாந்த் ஓகே! ரஜினி கமலுடன் கூட்டணி இல்லை: சரத்குமார்
ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இல்லை. அன்புச்சகோதரர் விஜயகாந்த் விரும்பினால் அவருடன் கூட்டணி வைப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை

மேலும் எனக்கு திரையுலகில் ஒருசிலர் தான் நண்பர்கள் இருக்கின்றனர். ரஜினி, கமல் இருவரும் என்னுடன் திரையுலகில் பயணம் செய்தவர்களே தவிர நண்பர்கள் இல்லை' என்றும் கூறினார்