வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (13:01 IST)

தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்-பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth
தேமுதிக எந்தக் கூட்டணியிலும் இல்லை,  யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்று தேமுதிக. இக்கட்சியின் தலைவராக  நடிகர் விஜயகாந்த்  உள்ளார். இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்  நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

‘’தேமுதிக எந்தக் கூட்டணியிலும் இல்லை…யாருடனும் கூடணியில் இல்லாத நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி அழைப்பு வரும்? யாருடன் தேமுதிக கூட்டணி என்பதை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்’’ என்று கூறினார்.


சமீபத்தில்,  தேசிய ஜன நாயகக் கூட்டணி சார்பில் பாஜக தலைமையில் டெல்லியில் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக, ஐஜேகே, தமாகா, பாமக உள்ளிட்ட 38 கட்சிகள் கலந்துகொண்டன.