வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஜூலை 2023 (12:20 IST)

எங்களை இரண்டு கூட்டணியும் அழைக்கவில்லை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

கோப்புப் படம்
யாருடனும் கூட்டணியில் இல்லாததால், டெல்லி NDA எங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும், கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது, மக்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
மேலும் ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
 
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியும் தங்களை இரண்டு கூட்டணியும் அழைக்கவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran