திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 11 மே 2020 (20:59 IST)

ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குக- விஜயகாந்த் டுவீட்

விழுப்புரம் மாவட்டம் முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயை, இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேமுதிக சார்பில் ₹ 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மற்றொரு டுவிட்டர் பதியில் , முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்றவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என தெரிவித்துள்ளார்.