செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (11:37 IST)

மாஸ்க் போட்டு போட்டோ போடுங்க! – கேப்டனின் புதிய சேலஞ்ச்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தேமுதிக தொண்டர்களை புதிய சேலஞ்ச் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக சானிட்டைசர் கொண்டு கை கழுவது, மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முக கவசம் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரவும், டிபியாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து பலர் முக கவசம் அணிந்து போட்டோக்களை பகிர்ந்து வரும் நிலையில், இதை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதே தெரிவித்திருந்தால் மேலும் உபயோகமாக இருந்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.