இறந்தவர்களை எனது கல்லூரி நிலத்தில் புதைக்கலாம் – விஜயகாந்த் அறிவிப்பு
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய பொதுமக்களிடையே எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கற்கள், கட்டைகளால் ஆம்புலன்ஸை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில், அவர்களை அடக்கம் செய்வதற்காக தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு நிலப்பகுதியை தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.