புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (17:26 IST)

நடிகர் விஜய்க்கு உதவிய விஜயகாந்த்... வைரலாகும் ஒரு சூப்பர் ’ ஃபிளாஸ் பேக் ’

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர்.  இவர் தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பின்னர் நாளைய தீர்ப்பு என்ற படத்திலும்  நடித்து ஓரளவு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
அதனையடுத்து எஸ்.ஏ. சந்திரசேகர் அப்போதைய சூப்பர் ஹீரோவாக விஜயகாந்திடம் ,விஜய்யின் படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதனால் செந்தூரப்பாண்டி போன்ற படங்களில் விஜயகாந்த் நடித்ததாகவும் , அதில் விஜய்க்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகமாகி, அவருக்கென மார்க்கெட்டும் கிடைத்ததாகவும் தெரிகிறது.
அப்போது வளரிளம்  விஜய்யுடன் , நடிகர் விஜய்காந்த் நடித்த படமும் நல்ல வியாபாரமாகி, வசூலும் கிடைக்க, அந்த லபத்தை விஜயகாந்திடம் கொடுக்கச் சென்றார் எஸ்.ஏ.சி.ஆனால்  கேப்டன் விஜயகாந்த் அதை வாங்க மறுத்து , நான் உங்களுக்கு செய்த உதவிக்கு எனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்தாதிங்க  என உரிமையுடன் கோபப்பட்டுள்ளாராம்.
 
தற்போது இந்த விசயம் சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.