வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (19:57 IST)

தை மாசத்துக்கு அப்புறம் பாருங்க நம்ம விஜயகாந்த ...விஜயபிரபாகர் அதிரடி!

தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த புதிதில் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுக்கே கிலி ஏற்படுத்தியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால்  வருடம் ஏற ஏற விஜயகாந்த் கட்சிக்கான  மவுஸ் மக்களிடையே குறைந்து போனது. 
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த தேமுதிக கட்சி போட்டியிட்ட  அனைத்து தொகுதிகளிலு படுதோல்வி அடைந்தது.
 
இந்நிலையில் திருச்சி  மருங்காபுரியில் நடைபெற்ற விழாவில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது : 
 
வரும் தை மாதத்தில் நம்ம தலைவர் விஜயகாந்த் சிம்ம குரலோடு வருவார். கட்சி ஆரம்பித்து நல்ல நிலையில் இரூந்த போது நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சி தொய்வுற்ற போது அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.
 
நம்ம தலைவர் விஜய்காந்த நல்ல முறையில், உள்ளார். அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல்.. தை மாதம் பிறந்தால் விஜயகாந்த் சிம்மகுரலோடு வருவார். தமிழகம் எங்கும் வலம் வருவார் என்று தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார்.