1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (17:51 IST)

விஜிபி சிலை மனிதன் சாகவில்லை: அதிர்ச்சி வீடியோ வைரல்

சென்னை கோல்டன் கடற்கரையில் அசையா மனிதராகவும் சிலை மனிதராகவும் நின்று கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தாஸ் என்பவர் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி விட்டதாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் சிலை மனிதன் தாஸ் தற்போது நல்ல உடல் நலத்துடன் உயிருடன் தான் உள்ளார் என்றும் விஜிபி கடற்கரை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது 
 
இது குறித்து விஜிபியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தாஸ் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் தான் மரணம் அடைந்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் மீண்டும் கோல்டன் பீச் திறக்கப்பட்டு உடன் தான் பணிக்கு வர உள்ளதாகவும் அப்போது சுற்றுலா பயணிகள் தன்னை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது