புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (12:18 IST)

ரூ.5.52 கோடி கடன் பாக்கி: ஏலத்திற்கு வந்த விஜயகாந்த் வீடு, கல்லூரி, நிலம்...

ரூ.5.52 கோடி கடன் பாக்கியால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி, நிலம் ஆகியவை ஏலத்தில் விடப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சுமார் ரூ.5.52 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதால் இந்திய ஓவர்சீஸ் வங்கி விஜயகாந்தின் வீடு, நிலம், வணிக கட்டடம், கல்லூரில் ஆகியவற்றை ஏலத்தில் விடுகிறது. 
 
விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நாளிதழில் வெளியிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26 ஆம் தேது ஏலத்துக்கு வருகிறது.
அதேபோல் மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு விடப்படுகிறதாம். வீடு மற்றும் கல்லூரியை தவிர்த்து சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம் மற்றும் வணிக கட்டடமும் ஏலத்தில் விடப்படுகிறது. 
 
கடன் பாக்கி, வட்டி மற்றும் இதர செலவுகளை வசூலிக்க வியகாந்தின் சொத்துகள் ஏலத்தில் விடப்படுவதாக இந்திய ஓவர்சீஸ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.