1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:54 IST)

காலம் தாழ்த்தினாலும் ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி.. விஜயகாந்த் அறிக்கை..!

vijayakanth
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு காலம் தாழ்த்தி ஒப்புதல் வழங்கினாலும் கவர்னருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார் 
 
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார். 
 
அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுவதற்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தடுக்கப்படும். 
 
இந்த மசோதாவுக்கு காலம் தாழ்த்தாமல் முன்கூட்டியே ஒப்புதல் வழங்கி இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இருப்பினும் காலம் தாழ்த்தினாலும் தற்போதாவது ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறேன். இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva