செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (15:58 IST)

தீவிரமாகும் கொரோனா பரவல்: விஜயகாந்த் அறிவுறுத்தல்!

vijayakanth
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
தமிழகத்தில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனவே மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்
 
நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கூட்டம் கூடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தமிழக அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்