செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (10:56 IST)

இன்ஸ்டாகிராமில் இனி வயதை ஏமாற்ற முடியாது… இணைக்கப்பட்ட புதிய வசதி!

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அதிகளவில் பயனர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் இன்றைய உலகின் முக்கியமான தொடர்பு சாதனங்களாக ஆகியுள்ளன. உலகின் கால்வாசி பேராவது தற்போது இதுபோன்ற சமூகவலைதளங்களில் தங்கள் கணக்குகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சதவீதம் கணக்குகளாவது போலி கணக்குகளாக இருக்கும்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் வயதை மறைத்து போலிக் கணக்குகளை உருவாக்குவதை தவிர்க்க, புதிய வசதியை இணைத்துள்ளது. புதிதாக கணக்கு திறக்கும்போது பயனர்கள் இனிமேல் தங்கள் செல்பி புகைப்படங்களை பதிவிட்டுதான் கணக்கைத் தொடங்க முடியும். இதன் மூலம் கணிசமாக போலிக் கணக்குகளை குறைக்கலாம் என சொல்லபப்டுகிறது.