திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (17:35 IST)

மீண்டும் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள்: பார்த்திபனிடம் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த நடிகர் பார்த்திபன், நாலே மாதத்தில் தன்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என்று விஜயகாந்த் கூறியதாக தெரிவித்துள்ளார்.


 
அண்மையில் விஜயகாந்த் உடல நலக்குறைவு காரணமாக வெளிநாட்டு சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
 
இந்நிலையில் நேற்று நடிகர் பார்த்திபன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்தார். கடந்த 25ஆம் தேதி விஜயகாந்த் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார். பார்த்திபன் விஜயகாந்துக்கு பிறந்தநாள் பரிசாக மெழுகு விளக்கு ஒன்றை பரிசளித்தார்.
 
இந்த சந்திப்பு பின் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
மனதில் பாரமும், இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.