பிரச்சாரத்தில் ஒரு வார்த்தைக் கூட பேசாத விஜய்காந்த்!
கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்துக்கு வந்த விஜயகாந்த் எதுவும் பேசாமல் வெறுமனே தொண்டர்களுக்குக் கையசைத்தார்.
சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அணியில் இணைந்து இருக்கும் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது பிரேமலதா மட்டுமே 60 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தேமுதிக தலைவரான விஜயகாந்த் கூட போட்டியிடவில்லை என்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த கேப்டன் விஜயகாந்த் நேற்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேனில் இருந்த படியே வெறுமனே தொண்டர்களை நோக்கி கையசைக்க மட்டுமே செய்தார். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. சமீபகாலமாக விஜயகாந்த் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக வீட்டில் இருந்த படியே ஓய்வு எடுத்து வருகிறார்.