1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (09:45 IST)

பனங்காட்டு நரிகள் சலசலப்புக்கு அஞ்சாது - பிரேமலதா பேட்டி!

பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்புக்கு அஞ்சாது கொரோனா பரிசோதனைக்கு பிறகு தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி. 

 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா பிரச்சாரத்திற்கு சென்றிருந்த நிலையில் அவரை கொரோனா சோதனை செய்து கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அழைப்பை மறுத்து பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
பிரச்சாரம் முடிந்த பின் பிரேமலதா கொரோனா சோதனை செய்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பேட்டியளித்த பிரேமலதா, கடமையை செய்வோம் கடவுள் நமக்கு வழிவகுப்பார். சும்மா இவங்க பயமுறுத்துதல் செய்கிறார்கள். எனக்கு ஒன்றும் இல்லை. நான் நன்றாக உள்ளேன். நெகட்டிவ் என முடிவு வரும் என்று நாங்க பயந்தவங்க கிடையாது. சும்மா குழப்ப பாக்குறாங்க. நம்பல்லாம் பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என பேசினார்.