செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:58 IST)

நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் விஜயகாந்த்!

தேமுதிக கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட மாதங்களுக்குப் பிறகு இப்போது பொதுவெளியில் வந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக, பாமக உள்ளிட்டவற்றுடன் கூட்டணிக்கு பேசி வரும் அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று அக்கட்சியின் கொடிநாள் கொண்டாடப்பட்ட நிலையில் விஜயகாந்த் இன்று கட்சி அலுவலகத்துக்கு திறந்த வேனில் வந்து கொடியேற்றினார். அப்போது பேசிய அவர் ‘ என் தொண்டர்களையும், என் மக்களையும் சந்திக்க விரைவில் வரப் போகிறேன்’ எனக் கூறினார். விஜயகாந்தின் இந்த பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.