1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : புதன், 25 ஆகஸ்ட் 2021 (15:52 IST)

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்தநாள்… கொண்டாடி மகிழும் தொண்டர்கள்!

நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது தேமுதிக தொண்டர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

நடிகரும் தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து இன்று காலையிலேயே அவர் தனது குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அவரின் பிறந்தநாளை அடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்களும் உற்சாகமாக இணையத்தில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக விஜயகாந்த் வெளி உலகுக்கு வருவதில்லை. கட்சிப் பொறுப்பைக் கூட அவரின் மனைவியும் மைத்துனருமே பார்த்துக் கொள்கின்றனர். இதனால் கட்சியில் இருந்து பலரும் வெளிவரும் வேளையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொண்டர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.