திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (17:18 IST)

யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்: விஜயகாந்த் அறிவிப்பு!

யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்டு 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
மேலும் ஒவ்வொரு பிறந்தநாளின் போது விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூற ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டின் மின் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
அதில் கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கூட்டம் கூடுவதை தவிர்த்து தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து என்னுடைய பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்