வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 மே 2021 (09:39 IST)

எங்களையாலே முட்டாள்னு சொன்னீங்க..? – பதிலுக்கு ட்ரெண்டாகும் #முட்டாள்_சென்னையன்ஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கோவை தொகுதிகளில் அதிக வெற்றி பெற்றதை ட்ரோல் செய்தவர்களுக்கு எதிராக கோவை மக்களும் #முட்டாள்_சென்னையன்ஸ் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களே பெற்று தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் கோவையில் அதிமுகவின் கை ஓங்கி உள்ளது. பெரும்பான்மை தொகுதிகளிலும் அதிமுக வென்றுள்ள நிலையில் சிலர் அதை கிண்டல் செய்யும் விதமாக #முட்டாள்_கோவையன்ஸ் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர்.

இதற்கு எதிராக கோவை பகுதியை சேர்ந்த நெட்டிசன்கள் பலர் திமுக அதிக வெற்றி பெற்ற சென்னையை குறிப்பிட்டு #முட்டாள்-சென்னையன்ஸ் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் சமூக வலைதளங்கள் பரபரப்புடன் காணப்படுகின்றது.