1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (08:43 IST)

ஒரு லட்சம் வாக்குகள் பெற்று செந்தில்பாலாஜி வெற்றி: அமைச்சர் பதவி கிடைக்குமா?

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் அந்த கூட்டணியில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ள நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று உள்ளார். அவர் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டதால்ல் வெற்றி சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில் மிக அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக அமைச்சரவையில் செந்தில்பாலாஜிக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
கரூர் தொகுதியில் மொத்தம் 78 பேர் போட்டியிட்ட நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் தவிர மீதி 76 பேர் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது