செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (19:02 IST)

ஜெ. மரணத்தில் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி: ஓ.பி.எஸ்.

ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம குறித்து அறிய நீதி விசாரணை கோரி, ஓ.பன்னிர்செல்வம் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைப்பெறும் உண்ணாரவிரதம் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
ஜெயலலிதா மரணமடையும் தருவாயில் இருந்ததாக என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால் என்னிடம் கூறியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டுள்ளார். எனவே, அந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடருவேன். 
 
ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை நடந்தால் முதலில் நான்தான் விசாரிக்கப்படுவேன் என விஜயபாஸ்கர் கூறுகிறார். உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர்தான் இருப்பார், என்று கூறியுள்ளார்.