வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (15:39 IST)

அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த விஜய பிரபாகரன்!

அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த விஜய பிரபாகரன்!
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார் விஜய பிரபாகரன்.
 
தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது என செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரேமலதா சமீபத்தில் இது குறித்து பேட்டியளித்தார். 
 
அதில் அவர் கூறியதாவது, தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினார்கள். நாங்கள் தர்மத்தோடு இருக்கிறோம். இன்னும் இரு தினகங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம் என தெரிவித்தார். 
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது அவரது மகன் விஜய பிரபாகரன், தங்களுக்கு மாநிலங்களவை எம்பி பதவி அளிப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணியில் இருந்தாலும் தனித்து செயல்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.