வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (11:09 IST)

ஜல்லிகட்டில் மயங்கி விழுந்த விஜயபாஸ்கரின் காளை உயிரிழப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளை கலந்து கொண்ட நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியான சில நிமிடங்களில் மயங்கி விழுந்தது

இதனை அடுத்து அந்த காளை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது 
 
கருப்பு கொம்பன் என்று அழைக்கப்படும் இந்த காளை புதுக்கோட்டை வடசேரி பட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது கம்பத்தில் முட்டியதால் மயங்கி விழுந்தது. இதனை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த காளை உயிரிழந்ததால் அதன் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்று உள்ளது. 
 
2018 ஆம் ஆண்டு விஜய் பாஸ்கரின் கொம்பன் காளை இதேபோல் உயிரிழந்த நிலையில் தற்போது கருப்பு கொம்பன் காளையும் உயிரிழந்திருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran