1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (17:41 IST)

1967-ல் அறிஞர் அண்ணா; 2021-ல் விஜய் அண்ணா: மதுரையை கதிகலக்கும் போஸ்டர்!!

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஜய் ஆட்சி என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாம் தலைநகர் குறித்து அமைச்சர்கள் விவாதம் செய்து வருகின்றனர். மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.  
 
இதனை அடுத்து வெல்லமண்டி நடராஜன் திடீரென மதுரை வேண்டாம் திருச்சி தான் இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அமைச்சர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுபுள்ளி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. 
 
இந்நிலையில் இந்த சர்ச்சையில் இருந்தே மதுரை மீளாத நிலையில் அடுத்து விஜய் ரசிகர்கள் அடுத்த சர்சையை கிளப்பியுள்னர். ஆம், தமிழகத்தில் 1967-ல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி, 2021 ஆம் ஆண்டு 2021-ல் விஜய் ஆட்சி என விஜய் மக்கள் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.