1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (15:28 IST)

விஜய் எங்கு விக் வாங்குகிறார்? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் மீரா மிதுன்!

நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து அவதூறு செய்யும் வகையில் மீரா மிதுன் பேசிவருவது அவரது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து வருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்படட் நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்து வருகின்றனர். இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்கிற ரீதியில் பேசி வருகின்றன.

இந்நிலையில் இப்போது மீரா மிதுன்  மீண்டும் விஜய்யை வம்பிழுக்கும் விதமாக ஒரு டிவீட்டை போட்டுள்ளார். அதில் ‘ஒரு சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளன. நடிகர் ஒருவர் எந்த ஸ்டூடியோவில் இருந்து விக் வாங்குகிறார் என்பது பற்றி. விக்…. விக்கய்ய்ய்ய்’ எனக் கூறியுள்ளார். இதில் அவர் விஜய் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் விஜய்யை கூறுகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.