திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (11:52 IST)

’அசுரன்’ பட டயலாக்கை பேசிய விஜய்.. கல்வி விழாவில் சுவாரஸ்ய பேச்சு..!

தளபதி விஜய் இன்று மாணவ மாணவிகளின் கல்வி விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அசுரன் படத்தின் வசனத்தை பேசினார். 
 
காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், பணம் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ஆனால் உங்களுடைய படிப்பை மட்டும் உங்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்ற வசனம் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதன் பிறகு தான் இந்த விழா ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் நீங்கள் தான் நாளைய தலைமுறை வாக்காளர்கள் என்றும் அடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுகள் என்றும் நம் கையை வைத்து நம்மையே குத்துவார்கள், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தான் சொல்கிறேன் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களை சந்தித்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறி அவர் காமராஜர் அம்பேத்கார் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
சமூக வலைதளங்களில் உள்ள அனைத்தையும் நம்ப வேண்டாம் என்றும் உங்களுக்குள் ஒருவர் இருப்பான், அவன் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Mahendran