வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (11:32 IST)

விஜய்யின் கல்வி விருது விழா: இத்தனை கோடி ரூபாய் செலவா?

சென்னையில் இன்று விஜய் கல்வி விருது விழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவிற்காக நடிகர் விஜய் சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் கல்வி உதவி தொகை, சான்றிதழ் ஆகியவை சேர்த்து மொத்தம் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு  போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, விருந்து செலவு மற்றும் இந்த விழா நடைபெறும் இடத்தின் வாடகை ரூ.40 லட்சம் ஆகியவை சேர்த்து இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக விஜய் மக்கள் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். 
 
கிட்டத்தட்ட ஒரு அரசு செலவு செய்து நடத்தும் விழா போல் தனி ஒரு நபர் தமிழகத்தில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்து பிரம்மாண்டமாக விழா நடத்துவது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran