ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (07:20 IST)

லியோ படத்தின் நான் ரெடி பாடலை எழுதியுள்ளது யார் தெரியுமா?

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஜய்யோடு மன்சூர் அலிகான், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்களோடு 2000 டான்ஸர்கள் ஆடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அனிருத் இசையில் விஜய்யே எழுதியுள்ள இந்த பாடலை லோகேஷின் இணை இயக்குனர் விஷ்ணு எடாவன் எழுதியுள்ளாராம். இவர் ஏற்கனவே லோகேஷின் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.