விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக் கொலை; ரசிகர் மன்றத்தாரிடையே மோதல்!
புதுச்சேரியில் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ரசிகர் மன்ற தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் மணிகண்டனுக்கும், மன்ற நிர்வாகியாக உள்ள ஆட்டுப்பட்டியை சேர்ந்த ராஜசேகருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நெல்லித்தோப்பு வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்த ராஜசேகர் மற்றும் அவரது ஆட்கள் மணிகண்டனடை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக மணிகண்டனின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்களை தேடி வருகின்றனர்.