1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold Price fall down

தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

Tamilnadu
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை தற்போது மெல்ல குறைந்து வருகிறது
 

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.384 விலை குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.38,416-க்கு விற்பனையாகிறது. அதேபோல இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.48 குறைந்து  ரூ.4,802 விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் கொரோனா நகரமாகும் சென்னை! – மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!