திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (11:09 IST)

மீண்டும் கொரோனா நகரமாகும் சென்னை! – மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக தலைநகரான சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று உச்சமடைந்திருந்த நிலையில் தற்போது அங்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல அலுவலகங்கள், கடைகள், சந்தைகள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் சென்னையில் அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக 0.5 சதவீதமாக இருந்த புதிய பாதிப்புகள் தற்போது 2.5 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது, சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.