வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 மே 2025 (11:10 IST)

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தவெக தலைவர் விஜய்..!

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! தவெக தலைவர் விஜய்..!
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இன்று அதிகாலை இந்திய ராணுவம் "இந்திரா தாக்குதல்" நடத்தியது.
 
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த சூழலில் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்து பல அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சற்று முன் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், "இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva