வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 மே 2025 (11:05 IST)

ஆபரேசன் சிந்தூர்: 80 பயங்கரவாதிகள் பலி.. மலைபோல் குவிக்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு..!

ஆபரேசன் சிந்தூர்: 80 பயங்கரவாதிகள் பலி.. மலைபோல் குவிக்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு..!
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 
 
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மலை போல் குவிந்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பயங்கரவாதிகள் பதுங்கிய நிலைகளை கண்டுபிடித்து, குறி வைத்து தாக்குதல் நடந்ததாகவும், இன்னும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva