மத்திய அரசுக்கு மணிப்பூர், மாநில அரசுக்கு வேங்கை வயல்: அனல் தெறித்த விஜய் பேச்சு..!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், இன்னும் ஒரு வருடம் கூட கட்சி தொடங்கி முழுமையாக ஆகாத நிலையில், ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் கட்சியையும் மாநிலத்தில் ஆளும் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற அம்பேத்கர் புத்தம் விழாவில், "மணிப்பூரில் என்ன நடக்கின்றது என்று நாம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாத ஒரு அரசு மத்தியில் உள்ளது," என்று விஜய் பேசினார்.
அதை அடுத்து, "வேங்கை வயலில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலங்கள் தாண்டி இத்தனை வருடங்கள் ஆகியும், அந்த வழக்கில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இதையெல்லாம் அம்பேத்கர் அவர்கள் உயிரோடு இருந்து பார்த்தால் வெட்கப்பட்டு தலை குனிவார்," என்று கூறி, மாநில அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
"கூட்டணி கணக்குகளை அடிப்படையாக வைத்து 200 தொகுதிகளை வென்று விடலாம் என்று இறுமாப்புடன் இருக்கும் கட்சிகளுக்கு மக்களோடு சேர்ந்து நான் எடுக்கும் எச்சரிக்கை" என்றும் அவர் கூறியது தான் அவருடைய பேச்சின் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை அட்டாக் செய்திருக்கும் விஜய், ஏதோ ஒரு மிகப்பெரிய பின்னணியில் இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Edited by Mahendran