தமிழ் சினிமா துறையினர் இடையே ஒற்றுமை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

sinoj| Last Modified வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (20:42 IST)

இந்தியாவில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா தொற்றைக் குறைக்க மத்திய மாநில அரசுகள்
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதால் சினிமா படப்பிடிப்புகள்
எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது :

திரையுலகினர் இடையே ஒற்றுமையில்லை. நடிகர் சங்கமாக இருந்தாலும்சரி,தயாரிப்பாளர் சங்கமாக இருந்தாலும் ஒற்றுமை மிக அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமா துறையினர் ஒற்றுமையுடன் ஒருங்கி்ணைந்து பிரச்சனையில் பேசித் தீர்கத் தயாராக இருக்குமானால் அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும்
அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாய் தீர்வு காண வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கும் நிலையில், அண்மையில் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளார்கள் சங்கம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :