விஜய்யின் ’’மாஸ்டர்’’ பட சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி? - அமைச்சர் கடம்பூர் ராஜூ
பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தல் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளாஅர். இது விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது மாஸ்டர்படம்;. இப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டில் மிகக்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் எப்போது படம் ரிலீஸாகும் எனப் பெரும் கேள்விகள் ரசிகர்களிட,ம் எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. குறிப்பாக இப்படம் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் பிரமாண்டமாக ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தல் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளாஅர். இது விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மாஸ்டரின் தெலுங்கு டீசர் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.