1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:57 IST)

குளிரில் தவிக்கும் மக்கள்; போர்வை வழங்கிய விஜய் ரசிகர்கள்!

Vijay Makkal Iyakkam
தமிழ்நாட்டில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் சாலையோர ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் போர்வைகளை வழங்கியுள்ளனர்.

நடிகர் விஜய் பெயரில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. நலப்பணிகள் பலவற்றையும் மேற்கொண்டு வரும் இந்த இயக்கம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ ட்விட்டர், யூட்யூப் தளங்களை தொடங்கியதுடன், குருதி கொடையகமும் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மழையை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கி பல பகுதிகளிலும் குளிர் வாட்டி வருகிறது. சென்னையில் சமீப காலமாக குளிர் அதிகமாக உள்ள நிலையில் சென்னையில் உள்ள தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வீதிகளின் ஓரமாக வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு பனிக்காலத்தை தாக்குப்பிடிக்க போர்வைகளை வழங்கி உதவியுள்ளனர்.

இதுகுறித்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் ட்விட்டர் பதிவில், தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி பனி மற்றும் குளிர்காலத்தை முன்னிட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K